முதல் அத்தியாயம், யுத்தம் தொடங்குவதற்கு சற்று முன்னர் போர்க்களத்தின் நிலவரத்துடன் தொடங்குகிறது.
இந்த அத்தியாயம், படைகளின் இருபுறமும் இருந்த முக்கியமான மன்னர்கள், துரியோதனனின் மனநிலை, சங்கு ஊதும் ஒசைகள், அர்ஜுனனின் குழப்பம், மற்றும் போரில் ஈடுபடாத அர்ஜுனனின் வருத்தத்தை விவரிக்கிறது.
அத்தியாயத்தின் முடிவில், அர்ஜுனன் ஸ்ரீ பகவான் கிருஷ்ணரிடம், ராஜ்ஜியத்தையும், இன்பத்தையும் பெறுவதற்காக தனது சொந்த உறவினர்களைக் கொன்றால், தான் பாவ நிலையை அடைவேன் என்று கூறுகிறான்.
மேலும், அர்ஜுனன் தனது உடல் நடுங்குவதால் தன் காண்டீபத்தைக் [வில்] கூட கையில் வைத்திருக்க முடியாது என்று சொல்கிறான்; அவன் மனதில் மிகுந்த மன உளைச்சலுடன் புலம்புவதைக் காண முடிகிறது.