பதினேழாவது அத்தியாயம், உள்ளார்ந்த நம்பிக்கை, மூன்று வகையான உணவு, வழிபாடு, தவம் மற்றும் தானம், மற்றும் ஓம் தத் சத், ஆகியவற்றை பற்றி விரிவுரைக்கிறது.
ஒருவனுக்கு என்ன மாதிரியான நம்பிக்கை இருக்க வேண்டும் என்று அர்ஜுனன் கேட்கிறான்.
ஒவ்வொருவனின் நம்பிக்கையும் அவனின் உள்ளார்ந்த தன்மைக்கு ஏற்ப உருவாகிறது என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார்; உணவு, வழிபாடு, தவம் மற்றும் தானம் ஆகியவை இயற்கையின் மூன்று குணங்களில் உள்ளன என்று அவர் மேலும் கூறுகிறார்; அவற்றின் பல்வேறு வகைகளையும் அவர் விளக்குகிறார்.
இறுதியாக, முழுமையான பிரம்மத்தை குறிக்க 'ஓம் தத் சத்' என்ற மூன்று புனித சொற்கள் பயன் படுத்தப் படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.