இறுதி மற்றும் பதினெட்டாவது அத்தியாயம், துறவறம் மற்றும் அர்ப்பணிப்பு, ஒரு செயலின் ஐந்து காரணங்கள், இயற்கையின் மூன்று குணங்களின் அடிப்படையில் ஞானம், செயல், செய்பவன், புத்தி, உறுதிப்பாடு மற்றும் இன்பம் ஆகியவற்றின் பரிணாமம், செய்யும் வேலையின் அடிப்படையில் மனிதர்களின் வகைகள், சுய கட்டுப்பாடு கொண்ட மனம், பக்தி, அனைத்து ரகசியங்களின் ரகசியம், மற்றும் அனைத்து இடங்களிலும் இருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஆகியவற்றை பற்றி விரிவுரைக்கிறது.
அர்ஜுனன் துறவறத்துக்கும் அர்ப்பணிப்பிற்கும் உள்ள வேறுபாடு பற்றி கேட்கிறான்; பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவற்றை விளக்குகிறார்.
மேலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு செயலின் ஐந்து காரணங்கள், ஞானம், செயல், செய்பவன், புத்தி, உறுதிப்பாடு மற்றும் இன்பம் ஆகியவற்றின் மூன்று வகையான பரிணாமங்கள் விளக்குகிறார்.
செய்யும் வேலையின் அடிப்படையில் மனித குலத்தின் நான்கு வகைகள் பற்றி கூறுகிறார்.
மேலும், சுய கட்டுப்பாட்டு கொண்ட மனம் மற்றும் பக்தியால் ஸ்ரீ பகவான் கிருஷ்ணரை எவ்வாறு அடைவது என்பது பற்றியும் அவர் விளக்குகிறார்.
இவ்வாறு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் அனைத்து ரகசியங்களின் ரகசியத்தையும் வெளிப்படுத்துகிறார்.
அர்ஜுனன் இறுதியாக இந்த மாபெரும் ஞானத்தைக் கேட்டு தனது மாயை மறைந்து விட்டதாகக் கூறுகிறான்.
இவற்றையெல்லாம் பார்த்த சஞ்சயன், அர்ஜுனனுக்கும் ஸ்ரீ பகவான் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இவ்வளவு பெரிய புனித கலந்துரையாடலைக் கண்டதில் மிகவும் தான் மகிழ்ச்சியடைவதாக திருதராஷ்ட்ரரிடம் கூறுகிறார்.
இறுதியாக, 'பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன் எங்கிருந்தாலும், நிச்சயமாக அங்கு செழுமையும், வெற்றியும், செழிப்பும், உறுதியும், மற்றும் ஒழுக்கமும் இருக்கும்' என்று சஞ்சயன் கூறுகிறார்.