ஏழாவது அத்தியாயம், இயற்கையின் கூறுகள், அனைவரின் தோற்றம், ஞானமும் விஞ்ஞானமும், மற்றும் முட்டாளின் மாயை, ஆகியவற்றை பற்றி கூறுகிறது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஞானம் மற்றும் விஞ்ஞானம் பற்றி விளக்குகிறார்; இயற்கையின் பல்வேறு கூறுகளையும் இயற்கையின் குணங்களையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
மேலும் அவர் தான் அனைவரின் தோற்றம், என்று விரிவாகக் கூறுகிறார்; யோகத்தில் ஞானத்தைக் கொண்ட ஞானமுள்ள மனிதன், அவருக்கு மிகவும் பிரியமானவன் என்றும் அவர் கூறுகிறார்.
மேலும், முட்டாள்தனமான மனிதனின் மாயை பற்றியும் அவர் கூறுகிறார்.